மாணவியருக்கு புது 'நாப்கின்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2015

மாணவியருக்கு புது 'நாப்கின்'

பள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. வளர் இளம்பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச 'நாப்கின்' வழங்கும் திட்டத்தை, 2012ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.


மாணவியருக்கு பள்ளி ஆசிரியை மூலமாகவும், வளர் இளம்பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட மையம், அங்கன்வாடி ஊழியர், கிராமங்களில் கிராம சுகாதார செவிலியர் மூலமாகவும் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மாணவியருக்கு பெல்ட்டுடன் கூடிய நாப்கின் வழங்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது வழங்கப்படும் நாப்கினை பயன்படுத்துவதில், 11 முதல்,15 வயதுடைய சிறுமியர் சிரமப்படுகின்றனர். இதை எளிமையாக்க, பெல்ட்டுடன் கூடிய நாப்கின் வழங்குவது குறித்து ஆலோசனை நடக்கிறது' என்றார்.இந்தத் திட்டத்தின் கீழ், பருவ வயதை எட்டிய ஆறு முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும், 38 லட்சம் மாணவியர் பயன் அடைவர். இத்திட்டம், 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி