கல்விக் கடன் வேண்டுமா? vidyalakshmi.co.in என்ற இணையத் தளத்தை தொடர்பு கொள்ளுங்கள் :மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

கல்விக் கடன் வேண்டுமா? vidyalakshmi.co.in என்ற இணையத் தளத்தை தொடர்பு கொள்ளுங்கள் :மத்திய அரசு

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கென இணைய தளத்தை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.www.vidyalakshmi.co.in என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில்கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 5 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் 13வங்கிகள் இதில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.NSDL அமைப்பு நிர்வகிக்கும் இந்த இணைய தளத்தை நிர்வகிக்கிறது. கல்விக் கடன் கிடைக்காத காரணத்தால் உயர்கல்வியை மாணவர்கள் கைவிடுவதை முற்றிலும் தடுப்பதே இந்த இணைய தளத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இணைய தளத்திலேயே மாணவர்கள் கல்வி உதவித் தொகை மற்றும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி