15 ஆயிரம் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

15 ஆயிரம் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழகம் முழுவதும், 15 ஆயிரம் ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான - சர்வ சிக்ச அபியான் திட்டத்தின் கீழ், 15 ஆயிரம், பகுதி நேரசிறப்பு ஆசிரியர்கள், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்;


இவர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.'பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதனால், 'சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, போட்டித் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று, 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு, மனு அளித்தனர்.

4 comments:

  1. தாங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளிர்கள் . நாங்கள் முழு நேரப் பணி, பணிநிரந்தரம் வேண்டி கவனம் ஈர்ப்பு கூட்டம் மட்டுமே மாவட்ட தலைநகரங்களில் நடத்தினேம்

    ReplyDelete
  2. தாங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளிர்கள் . நாங்கள் முழு நேரப் பணி, பணிநிரந்தரம் வேண்டி கவனம் ஈர்ப்பு கூட்டம் மட்டுமே மாவட்ட தலைநகரங்களில் நடத்தினேம்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Eathanayo computer/PET teachers experiance scal 15000/month salary vaangikondu irndhuvittu govt job endravadhu nirandharam aahum endru 5000/salarykku vandharhal. Bus/petrol expense poga Rs.2500 dhan athil minjum. Ippo meendum private job sendral fresh 5000 dhan kidaykkum. Ivarhal work seithe schoolil koda mariyathay irukkadhu.
    Privete schoolil illadhe tailaring teachers govt schoolil iruppadhal niraya manavarhal kurippaga pengal suyamaha theikkum aarvathudan katru varugindranar. Indhe teachersum suya tholil seithu matham Rs.10000-20000 sbathithavarhal.
    Matre drawing & others teachersum thiramaykku thagundharpol panipurindhu vanthullanar.
    Oru Arasu podum thittathal inndh 16000 teachersin eathirkalam ealanamaha koodadhu. Ivarhalin eakkam AMMA ungalin varthayildhan ullathu........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி