211 பல் மருத்துவ இடங்கள் மற்றும் 109 எம்.பி.பி.எஸ். காலி இடங்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 26–ந்தேதி நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

211 பல் மருத்துவ இடங்கள் மற்றும் 109 எம்.பி.பி.எஸ். காலி இடங்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 26–ந்தேதி நடக்கிறது

சென்னை, செப். 23–தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், 13 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது.


அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 2655 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 398 போக மீதமுள்ள 2257 இடங்கள் நிரப்பப்பட்டன.இதே போல தனியார் மருத்துவ கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு இதுவரை எம்.சி.ஐ. அனுமதி கிடைக்கவில்லை. மீதமுள்ள 8 மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 597 கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.


மேலும் பல மருத்துவ படிப்பிற்கான இடங்களும் இதன் மூலம் நிரப்பப்பட்டன.இந்த நிலையில் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குஎம்.சி.ஐ. அனுமதி அளித்தது. 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் 65 இடங்கள் தமிழக அரசுக்கும், 35 இடங்கள் தொழிலாளர்களுடைய வாரிசுகளுக்கும் வழங்கப்படுகிறது.மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராமல் ஏற்பட்ட காலி இடங்களும் தற்போது உருவாகி உள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 4 எம்.பி.பி.எஸ் இடங்களும் அரசு பல் மருத்துவ கல்லூரியில் 10 இடங்களும் காலியாக இருக்கின்றன.தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 40 எம்.பி.பி.எஸ் இடங்களும், பல் மருத்துவ இடங்கள் 211–ம் காலியாக உள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 65 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 330 இடங்கள் தற்போது காலியாக இருக்கின்றன.இதில் 109 எம்.பி.பி.எஸ். இடங்களும் 221 பல் மருத்துவ இடங்களும் அடங்கும். இந்த இடங்களை நிரப்ப 3–வது கட்ட கலந்தாய்வு 26 மற்றும் 27–ந் தேதிகளில் நடைபெறுகிறது.இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் உஷா கூறியதாவது:–அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தற்போது 330 இடங்கள் காலியாக உள்ளன. கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 65எம்.பி.பி.எஸ். இடங்களும் அடங்கும். இந்த இடங்களுக்கான 3–வது கட்ட கலந்தாய்வு 26, 27–ந்தேதிகளில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடக்கிறது.தகுதி உடைய மாணவர்களுக்கு எம்.எஸ்.எஸ் மற்றும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு கடிதமும்அனுப்பப்படுகிறது. இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டு காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. 28–ந்தேதிக்கு பிறகு தான் அதன் விவரம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி