"காலாவதியான எல்.ஐ.சி. பாலிசிகளை புதுப்பிக்க 2 மாதம் வரை சிறப்பு முகாம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

"காலாவதியான எல்.ஐ.சி. பாலிசிகளை புதுப்பிக்க 2 மாதம் வரை சிறப்பு முகாம்'

பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.


சென்னையில் எல்.ஐ.சி.யின் 59-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அண்ணாசாலை எல்.ஐ.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காப்பீட்டு வார விழா நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர்த.சித்தார்த்தன், வாடிக்கையாளர்கள் சிறப்புச் சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், காப்பீட்டு வார விழா குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன்னர், காப்பீட்டுத் துறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. இருப்பினும், எல்.ஐ.சி. பிரீமியம் வருமானத்தில் 69.21 சதவீதமும், தனி நபர் காப்பீட்டில் 77.85 சதவீதமும் சந்தைப்பங்களிப்பைக் கொண்டு முன்னிலை வகித்து வருகிறது.புதிய திட்டங்கள் அறிமுகம்: நிகழாண்டில் "ஜீவன் தருண்', பங்குச் சந்தையுடன் இணைந்த புதிய "எண்டோமெண்ட் ப்ளஸ்' ஆகிய இரண்டு புதியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் காப்பீட்டு வார விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளோம். நிகழாண்டு மார்ச் இறுதிக்குள், எல்.ஐ.சி, புதிதாக மேலும் 5 காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது.2 மாதம் சிறப்பு முகாம்: காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வசதியாகச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


இந்தச் சிறப்பு முகாம், செவ்வாய்க்கிழமை(செப்.1) தொடங்கி, அக்டோபர் இறுதி வரை நடைபெறும். முகாமில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் தொகை செலுத்தாத பாலிசிகளை தாமதத் தொகை செலுத்தி, புதுப்பித்துக் கொள்ளலாம். பாலிசிகளை புதுப்பிப்பதற்கு அருகிலுள்ள எல்.ஐ.சி. அலுவலகங்கள், வாடிக்கையாளர் மையம் ஆகியவற்றை பாலிசிதாரர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், காலதாமதத் தொகையில், 20, 25, 30 சதவீதம் வரை தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்றார் த.சித்தார்த்தன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி