பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2015

பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு, 55 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்தவும், 'பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.


கடந்த, 2011 - 12ம் கல்வி ஆண்டு முதல் செயல்படும் இத்திட்டத்தில், 3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், ஆதிதிராவிட, பழங்குடியின பெண் குழந்தை களுக்கு, ஊக்க உதவித்தொகையாக, ஒவ்வொரு மாதமும், 50 ரூபாய்வீதம், 10 மாதங்களுக்கு, 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, இந்த நிதிஆண்டில் அரசு, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.மேலும், மாணவியர், பள்ளியில் இருந்து இடை நிற்பதை தவிர்க்க, 6ம் வகுப்புமாணவியருக்கு மாதம், 100 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு, 1,000ரூபாய்; ௭ம், 8ம் வகுப்பு மாணவியருக்கு, 150 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு, 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, நடப்பு கல்வியாண்டில், 38 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி