அக்டோபர் 8–ந்தேதி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

அக்டோபர் 8–ந்தேதி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாகஅலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.


இந்த நிலையில் இந்த குழுவினர் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.கூட்டத்தில் அக்டோபர் 8–ந்தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை உள்ள 3.5 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி