அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்

பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 8ல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,”என சிவகங்கையில் உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார்.இன்று வரை ரத்தாகவில்லை .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, கல்வி, வீட்டு வாடகை படிகளை மத்திய அரசு போல் வழங்க வேண்டும். 2004ல் பகுதி நேரஆசிரியராக 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.அவர்களை 2006ல் அரசு பணிவரன்முறை செய்தது. ஆனால் பணி, பணப்பலன்கள் இன்று வரை கிடைக்கவில்லை.

கல்வித்துறையில்ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து, முதல்வரின் கவனத்தைஈர்க்கும் வகையில்,அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும்3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும், என்றார்.சங்க மாநில செயலாளர் சேதுசெல்வம், மாவட்ட செயலாளர் இளங்கோ உடனிருந்தனர்.

8 comments:

  1. செவிடன் காதில் ஊதின சங்கு போல அரசும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். எருமைமாட்டு மேல மழை பெய்ந்த மாதிரி .எவ்வளவுதான் போராடுவது. சினிமால வர்ற மாதரி எவனை யாவது போட்டு தள்ளியாவது நல்லது நடக்குமானு பார்ப்போம்.

    ReplyDelete
  2. போராடுவோம் வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  3. தொடர் போராட்டம் தேவை போராடுவோம் வெற்றி நிச்சயம்.தேர்தல் வருவதால் சி.எம் செவி சாய்ப்பார்

    ReplyDelete
    Replies
    1. எங்க அப்படி ஒன்னும் நடக்கிற மாதிரி தெரியல

      Delete
  4. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete
  5. தொடர் போராட்டம் என்பது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்துடிப்போடு இருக்கும்போதே தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் செய்வது ஏமாற்றுவேலை, தேர்தல் நேரத்தில்கூட தொடர் வேலைநிறுத்தம் இல்லை, ஒருநாள் வேலைநிறுத்தமாம், இதற்கெல்லாம் இந்த அரசும் அரசாங்கமும் மசியாது,
    தொடர் வேலைநிறுத்தம் தேவை.

    ReplyDelete
  6. தொடர் போராட்டம் என்பது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்துடிப்போடு இருக்கும்போதே தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் செய்வது ஏமாற்றுவேலை, தேர்தல் நேரத்தில்கூட தொடர் வேலைநிறுத்தம் இல்லை, ஒருநாள் வேலைநிறுத்தமாம், இதற்கெல்லாம் இந்த அரசும் அரசாங்கமும் மசியாது,
    தொடர் வேலைநிறுத்தம் தேவை.

    ReplyDelete
  7. தொடர் போராட்டம் என்பது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்துடிப்போடு இருக்கும்போதே தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் செய்வது ஏமாற்றுவேலை, தேர்தல் நேரத்தில்கூட தொடர் வேலைநிறுத்தம் இல்லை, ஒருநாள் வேலைநிறுத்தமாம், இதற்கெல்லாம் இந்த அரசும் அரசாங்கமும் மசியாது,
    தொடர் வேலைநிறுத்தம் தேவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி