மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2015

மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


இதனால், 1,880 ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தேங்கிகிடக்கும் சூழல் உருவானது.திருமணமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்ந்துவரும் சூழல் தொடர்ந்த நிலையில், மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழல் இருந்து வந்தது. குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், சக ஆசிரியர்களுக்கு நடப்பது போல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியது.

ஆசிரியர்களின் சூழலை உணர்ந்து தற்போது, கோரிக்கைக்கு செவிசாய்துள்ளது. சக ஆசிரியர்களுக்கு நடப்பது போன்று விதிமுறைகளை பின்பற்றி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.இதன் படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, 2015 செப்., 30 வரை காலியாக உள்ள கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக கணக்கிட்டு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுசெயலாளர் பரசுராமன் கூறுகையில், ''எட்டு ஆண்டுகள் கோரிக்கை தற்போது தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பங்களை பிரிந்து ஒரே பள்ளியில் தேங்கி, மனஅழுத்தத்தில் பணிபுரிந்த, 1880 ஆசிரியர்களுக்கும் தற்போது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கையை ஏற்ற, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,'' என்றார்.

12 comments:

  1. Thanks Mr Parasuraman & leaders your job is very well I expect lot of achieve through you R.Selvaraj

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. sir soluka when 2010 cv case judgement please sir .judgement varuma varatha soluka sir

    ReplyDelete
  4. soluka anybody judgement when please comment pannuka please..................................

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யாரென்று முதலில் சொல்லுங்கள் வழக்கு எதாவது போட்டவரா நீங்கள் அப்படி இல்லையென்றால் பொறுமையாக இருக்கவும் வழக்கு தொடர்ந்த நாங்களே கடந்த ஐந்து வருடங்கள் பொறுமையாக இருக்கிறோம் .

      Delete
    2. s , my case also finished ,wait for order k, madurai high court pending csae remaing people to speak write correct comment don't use meaningness word.

      Delete
    3. please furnish your case details.

      Delete
  5. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    ReplyDelete
  6. what about remaining 30% adw case & posting?

    ReplyDelete
  7. wt ab main 30% adw sgt case & posting?

    when adw case come hearing?

    ReplyDelete
  8. REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE
    END VERY SOON(sekar sir)


    ஒரு எளிய சட்ட விள‌க்கம் :

    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு
    வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
    வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு
    பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்
    கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
    இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
    கூறியிருக்க வேண்டும்.


    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது
    தான் சரியான தீர்ப்பு ஆகும்.


    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
    பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட

    சட்டமோ,
    அரசின் கொள்கையோ,
    அரசாணையோ,
    அடிப்படை முகாந்திரமோ இல்லை.


    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:


    judgement 1

    669 vacancies filled by = general 69% reservation act[all
    castes ]


    judgement 2

    669 vacancies filled by = sc &sca only


    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
    அது தவறான தீர்ப்பு ஆகும்.

    அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?



    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
    பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
    ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?


    அதாவது

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste


    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
    அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே october வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.




    hello saravanan ,ram,raja,kamalraj sir 30% goes to sc sca only. it is the 100% truth judgement,

    but eppothu valakku visaranaikku varm enbathu theriyavillai.

    october 15 varaikkum wait pannuvom.illai enral aduththa katta poraatta nadavatikkai patri yosippom






    CMCELL REPLY OF ADW 30% POSTING; (saravanan)

    Name S.SARAVANAN

    Petition No *********

    Petition Date ********

    Address . ************
    **************
    **************
    ******

    Grievance

    ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உல்ல காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.



    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT


    Petition Status Rejected


    Concerned Officer:


    ADI DRAVIDA & TRIBAL WELFARE - DIR,ADI DRAVIDA
    WELFARE Reply Rejected. Case is pending in Madras High Court Madurai Divsion.
    Necessary Action is taken by Government to finalize the case. This fact is informed to the
    petitioner vide Directorate of Adi Dravidar Welfare Letter No. R3/28688/2014 dated
    22.09.2015




    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி