கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து!

போதிய உபகரணம் இல்லாததால், கோவை மண்டலத்தில், மூன்று கல்லுாரிகளின்செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 521 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள், 25ல் துவங்கி அக்.,10 வரை நடக்கின்றன.


தேர்வு நேரத்தில் பறக்கும் படையினர் ஆய்வு செய்து உபகரணங்கள், ஆய்வக வசதி இல்லாத கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம். இறுதி நேர ஆய்வுகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, கல்வியாண்டின் துவக்கத்திலேயே தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவுசெய்தது.அதன்படி, கோவை மண்டலத்திலுள்ள,62 கல்லுாரிகளில், 24 பறக்கும் படையினர், ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதுவரையிலான ஆய்வில், போதிய உபகரணம் இல்லாத மூன்று கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆய்வுப்பணி இன்றுடன் முடிக்கப்பட்டு, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளது. பறக்கும் படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆய்வில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தலா ஒரு கல்லுாரி என, மூன்று கல்லுாரிகளில் போதிய உபகரணம் இல்லாதது தெரியவந்துள்ளது. இக்கல்லுாரிகளில், 100 மாணவர்களுக்கு, இரண்டு அல்லது மூன்று செய்முறை உபகரணங்கள் மட்டுமே உள்ளன.எனவே, மூன்று கல்லுாரிகளிலும் தேர்வு நடக்காது. ஒரு மாத காலத்துக்குள் போதிய உபகரண வசதிகளை ஏற்படுத்த, கல்லுாரிகளுக்கு அவகாசம் வழங்கப்படும். மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிய பின்னரே, தேர்வு நடத்த அனுமதிக்கப்படும். இவ்வாறு, உயர் அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி