கல்வித்துறைக்கான பொது கருத்தரங்கு கூடம் அமையுமா? அதிகாரிகள் 'இரவல்' கேட்கும் பரிதாபம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2015

கல்வித்துறைக்கான பொது கருத்தரங்கு கூடம் அமையுமா? அதிகாரிகள் 'இரவல்' கேட்கும் பரிதாபம்

மதுரையில் கல்வித்துறை குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த, பொது கருத்தரங்கு கூடம் அமைக்க வேண்டும்,'' என, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கொண்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், தென் மாவட்டங்களுக்கான பள்ளி தணிக்கை அலுவலகம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), உட்பட பல்வேறு கல்வி அலுவலகங்கள் மதுரையை மையமாக கொண்டு செயல்படுகின்றன.


சென்னையை அடுத்தபடியாக கல்வித் துறை செயலர், இயக்குனர், இணை இயக்குனர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டங்கள் அதிகளவில் மதுரையில் நடக்கின்றன. ஆனால், கல்வித்துறை ஆய்வு கூட்டங்களை நடத்த கருத்தரங்கு கூடம் இல்லை.


நகரிலுள்ள ஒரு சில அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் கூட்ட அரங்குகளை அதிகாரிகள் 'இரவல்' கேட்டு, அலைகின்றனர். சில நேரங்களில், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஏதாவது காரணங்களை கூறி கருத்தரங்கு கூடங்களை ஒதுக்க மறுக்கின்றன. இதனால், அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு இடம் இருந்தால் கருத்தரங்கு கூடம் கட்ட கல்வித் துறை நிதி ஒதுக்க முடியும். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இடம் ஒதுக்கி கொடுத்தால் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி