முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

அரசு நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத் தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில் இந்தக் கழகத்தின் மாநிலச் செயற்குழு, மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பத்தாம் வகுப்பு மாணவர்களின் பேசுதல், கேட்டல் திறன் முழுமையாக வெளிப்படவும், தாய்மொழியான தமிழ்ப் பாடத்தில் முழுமையான தேர்ச்சி பெறவும், அரசுப் பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி நலம் வேண்டி தமிழ் இரண்டாம் தாளில் அக மதிப்பீடாக 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தாய்மொழியான தமிழ்ப் பாடத்தைப் பழைய முறைப்படி முதல் பாடமாக வைத்து தமிழக அரசு திருத்த ஆணை வழங்க வேண்டும். மத்திய அரசு ஜூலை முதல் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப் படியை 6% உயர்த்தி வழங்கியது போல, தமிழக அரசும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 6% அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை தமிழ் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குப் பட்டதாரி தமிழாசிரியர் தொகுப்பில் இருந்து முதுகலை தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் சா. மருதவாணன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் இரா. கோவிந்தன், சிறப்புத் தலைவர் ஆறுமுகம், பொதுச் செயலர் சு. நாகேந்திரன், மாவட்டத் தலைவர் து. கலியமூர்த்தி, செயலர் முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

22 comments:

  1. Adw 30% case will finish after election. என்று சொல்லப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. 5 Personage re lacssations vainly irukka sir anybody one tel u

      Delete
  2. வின்சென்ட் எனபவர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை அவருக்கு மாநகராட்சி பள்ளியில் வேலை கிடைத்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Corporation school list la Vincent name illa..suma Katha Vida kudathu...ethe pola poi sollitu irukanala than velaye namakku kidaika matenthu... Nalla varuveenga... Entha list la um Vincent name illa

      Delete
  3. இந்த வழக்கு எப்படி முடியும் என்பது தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வழக்கு விசாரணைக்கு வர தாமதம் ஆகலாம்..... வின்சென்ட் வேலைக்கு போய்டார்னு பொய் கூறி என்ன வர போகுது.... மாநகராட்சி பட்டியலில் பெயர் இல்லை.. ஆதிதிராவிடர் நலத்துறை பட்டியலில் இல்லை... ஏன் இந்த பொய்....

      Delete
  4. Rajalingam sir
    Tet varuma or
    Next list varuma

    ReplyDelete
    Replies
    1. அடுத்த டெட் தேர்வு 2016 ,இந்த ஆட்சி முடிவதற்குள் கனிசமான ஆசிரியர் காலியிடம் நிரப்புவார்கள்.இதற்கு 2013 passed candidates வைத்தே நிரப்புவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

      Delete
    2. Romba peru adhan solluranga sir

      Delete
  5. வாக்காளர் பட்டியல் வேலைதான் இப்ப நடக்குது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றி பேச எவனும் தயாரில்லை.

    ReplyDelete
  6. Intha year PG TRB varuvatharku vaipugal kuraivu than.. But next year kandippa varum.. Yeppa vanthalum padikirathu namma kadamai...

    ReplyDelete
  7. மன்னிக்கவும் சரவணன் வேலூர் எனக்கு கிடைத்த தகவலைதான் பதிவு செய்தேன். நானும் வேலை இழந்தவன். அவர் பதில் மனு தாக்கல் செய்து விட்டாரா?

    ReplyDelete
  8. பதில் மனு தர நிங்க 2 நாள் மதுரை ல அலஞ்சு பாரன் ரொம்ப பொய் சொல்ரதே வேலை

    ReplyDelete
  9. தெரிந்தால் தகவலை பதிவிடு இல்லைனா அமைதியா இரு முடிலைனா மதுரை போய் செலவு பன்னி அலைஞ்சு பார் கல்வி செய்தில பொலம்பாத

    ReplyDelete
  10. நன்றி மாதேஸ்

    ReplyDelete
  11. உங்கள் செல் நம்பரை பதிவு பன்னு தகவல் நான் சொல்லுரன் தெளிவா

    ReplyDelete
  12. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி