பள்ளிகளை மூடி போராட்டம்:பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

பள்ளிகளை மூடி போராட்டம்:பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

“பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர், 8ல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,” என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.


சிவகங்கையில், அவர் கூறியதாவது:முதல்வர் ஜெ., சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன்' என்றார்; இன்று வரை ரத்தாகவில்லை.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்டோபர், 8ம் தேதி தமிழகம் முழுவதும், 3 லட்சம் ஆசிரியர்கள், பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி