இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: சட்டப் பேரவையில் அமைச்சர் பழனியப்பன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: சட்டப் பேரவையில் அமைச்சர் பழனியப்பன்

சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக, தெரிவித்தார்.


மேலும் அவர் கூறும் போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 53 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற போது உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 18 சதவீதமாக இருந்தது என்றும் அது தற்போது, 42.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.உயர்கல்வி படிக்கும் பெண்களின் சதவீதம் 47ல் இருந்து 54ஆக அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் உயர்கல்வி படிப்போருக்கும் விலையில்லாத லேப்டாப் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி