பி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

பி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர 1,113 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பிஎட் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில்வெளியிடப்படுகிறது.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறையின்படி பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகள் சேரலாம்.


அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 1,113 பொறியியல் பட்டதாரிகள் உள்பட 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த நிலையில், பி.எட் கட் ஆப் மதிப்பெண் பட்டியல் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. பொது கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கிடையே, தரவரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி தெரிவித்தார்.பி.எட். மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டுதான் முதல்முறையாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி