"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2015

"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு'

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.


இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதில்:தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


பள்ளிகளிலும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.மேலும், விலையில்லா மடிக்கணினி உள்பட 14 வகையான நலத் திட்டங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.2011-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47.9 லட்சமாக இருந்தது, 2015-இல் 48.52 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி