வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? கவலைப்படவைக்கும் மத்திய அரசின்புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? கவலைப்படவைக்கும் மத்திய அரசின்புதிய திட்டம்

வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? உங்களை கவலைப்படவைக்கும் மத்திய அரசின் புதிய திட்டம் வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? என்று கேட்பது சாப்டீங்களா? என்று கேட்பது போல் இயல்பாக ஆகிவிட்ட நிலையில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.


மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள் தங்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும் (தனிப்பட்ட உரையாடல்கள் உட்பட) கண்டிப்பாக 90 நாட்களுக்கு சேமித்து வைப்பது கட்டாயமாகிறது. மேலும் அரசுகேட்கும்பட்சத்தில் அவற்றை வழங்குவதும் கட்டாயமாகிறது.இதேபோல், சேவையை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம். இத்திட்டம்வரைவு நிலையில் மட்டுமே உள்ளது என்றாலும் இது வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி என்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி