'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இணையதளம் நாளை துவக்கம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இணையதளம் நாளை துவக்கம்:

அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது. கலாமின், ஐந்து திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தியோருக்கு அக்., 15ம் தேதி 'அப்துல் கலாம் சேவை ரத்னா' விருதுவழங்கப்படுகிறது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சென்னையில், நேற்று கூறியதாவது:


டாக்டர் அப்துல் கலாமின், 85வது பிறந்த நாள் அக்., 15ம் தேதி வருகிறது. அன்று, அவரின் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்தியோருக்கு, 'அப்துல் கலாம் சேவை ரத்னா' விருது வழங்கப்பட உள்ளது.விருதுக்கான தகுதிகுடி மற்றும் போதை பழக்கங்களிலிருந்து மீட்டெடுப்போர்; ஊரணிகளை மீட்டெடுத்து, கிராமங்களில் மழைநீரை சேகரிப்போர்; பசுமை திட்டத்தில் மரங்கள் நட்டு, வளர்த்து பாதுகாப்போர்; திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவோர்; சூரிய ஒளி வளாகம், கிராமங்களை உருவாக்குவது போன்ற, ஐந்து திட்ட செயல்பாடுகளை ஆதாரத்துடன், www.abdulkalam.com என்ற இணையதளத்தில், அக்., 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு திட்ட செயல்பாடுக்கும், தற்போது உத்தேச இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கு, மூன்று பேர் வீதம், 15 பேரை தேர்வு செய்து விருதுகள், ரொக்கப் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளன; பங்கேற்போருக்கும் சான்று கள் வழங்கப்படும். இந்த, ஐந்து திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, புகை இல்லாத கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளை இந்தியா முழுவதும் உருவாக்குவது; இந்த இலக்கை, ஐந்து ஆண்டுக்குள் செயல்படுத்துவது என, திட்டமிடப்பட்டுள்ளது.


நடமாடும் மருத்துவமனைமேலும், 30 லட்சம் மாணவர்களை விழிப்புணர்ச்சி பெற்ற தலைமை பண்பு கொண்ட மாணவர்களாக மாற்றி, அதன் மூலம் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் சிறந்த தலைவர்களாக உருவாக்குவது தான் இந்த அமைப்பின் இலக்கு.இது தவிர, 300 நடமாடும் மருத்துவமனைகளை உருவாக்கி, தரமான மருத்துவ வசதி கிராமங்களுக்கு சென்றடைய செய்ய வேண்டும்; 300 நடமாடும் அறிவியல் ஆய்வகம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, அப்துல்கலாம் கண்ட லட்சிய இந்தியாவை உருவாக்க, பெரிதும் உதவும்.


அதற்காக, www.abdulkalamvisionindia.org என்ற புதிய இணையதள சேவை நாளை துவக்கப்படுகிறது. இந்த இணைய தளத்தில், உறுப்பினர்களாகவும், தன்னார்வலர்களாகவும் இணைந்து செயல்படலாம். இந்த அமைப்பை கிராமங்களிலும், நகரங்களிலும் மாநிலங்களிலும் ஏற்படுத்த, 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி