- Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2015

பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு சார்பில் செப்.,14ல் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில்,


திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது.எனவே,முன்னெச்சரிக்கையாக, அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்களுக்கு உரியவிழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களை அகற்றவும், சுத்தம் செய்யவும், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.கைகளை சுத்தமாக வைத்திருப்பது, குடிநீரை காய்ச்சி குடிப்பது, பாதுகாப்பான உணவுகளைஉட்கொள்வது, வகுப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி