கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால்போதும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2015

கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால்போதும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சமீபகாலமாக சென்னையில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் பல பகுதிகளில்‘இண்டேன்’ கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் போது ‘பில்’ தொகையைவிட கூடுதலாக ரூ.40 முதல் ரூ.60 வரை வசூலிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் மத்தியில் புகார் எழுந்தது.இதுகுறித்து,


நாளிதழில் நேற்று (புதன்கிழமை) ‘சென்னையில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய ரூ.60 வரை கூடுதல் கட்டணம் வசூல், இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க இல்லத்தரசிகள் கோரிக்கை’ என்ற தலைப்பில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைமை தகவல் தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் நேற்று ஒருகடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் சபீதா நட்ராஜ் கூறி இருப்பதாவது:-சமையல் கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய வரும்போது, அதை கொண்டு வருபவர்கள் கையில் இருக்கும் ‘பில்’லில் என்ன தொகை குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் கொடுத்தால் போதும்.


அப்படி வீடுகளுக்கு சிலிண்டர்சப்ளை செய்ய வருபவர்கள் யாராவது ‘பில்’ தொகையை விட கூடுதல் கட்டணம் கேட்டால், 1800-2333-555 என்ற கட்டணமில்லா தொலைபேசிஎண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தொடர்ந்து அனைத்துசமையல் கியாஸ் வினியோகஸ்தரர்களிடமும், சிலிண்டர் டெலிவரி செய்ய அனுப்பப்படுபவர்களிடம் ‘பில்’ தொகையில் இருக்கும் தொகையை விட கூடுதல் தொகை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி