கட்டாய ஹெல்மெட் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

கட்டாய ஹெல்மெட் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்தஉத்தரவின்படி, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது.


இதைத்தொடர்ந்து, இந்த ஹெல்மெட் அணியவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்புநிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம்இல்லை என்று கூறி வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-ஹெல்மெட் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரத்தில்,தலையிடும் விதமாக ஐகோர்ட்டு உத்தரவிடமுடியாது.


தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை, 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம்போல், அமல்படுத்தப்பட்டுவருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உள்துறை செயலாளர், டி.ஜி.பி.ஆகியோர் உத்தரவிட வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட அதிகாரம் இல்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள்,குழந்தைகள் ஹெல்மெட் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள். 2 கிலோ எடை கொண்டஹெல்மெட்டை எப்படி குழந்தைகளால்தாங்கிக்கொள்ள முடியும்?ஹெல்மெட் எப்படி இருக்கவேண்டும்? என்ற வடிவத்தை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருக்கும்பட்சத்தில், கட்டாயஹெல்மெட் உத்தரவை எப்படி அமல்படுத்த முடியும்? இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்டாய ஹெல்மெட்உத்தரவினால், தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஐகோர்ட்டின்உத்தரவை மறுஆய்வு செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார்.


அப்போது நீதிபதி, ‘வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போடவேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. வண்டியை ஓட்டுபவர்கள்மட்டுமல்ல, பின்னாள் உட்கார்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும். விபத்து ஏற்படும்போது ஆண், பெண் என்று எந்தவித்தியாசமும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்தில் மக்கள் பலியாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா?’என்று கருத்து தெரிவித்தார்.பின்னர், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி