TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2015

TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

புதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமாரிடம், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா அளித்த மனு:


கடந்த ஜூலை 2012-ல் தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பஉப) புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சுமார் 8,500 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேர் மட்டுமே 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்வாகி இருந்தனர்.கடினமான இதில் தேர்ச்சி பெற்ற இவர்களில் பலர் இன்று வரை அரசுப் பணி கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.

250 பேர் காத்திருப்பு:

தகுதித் தேர்வில் இதுவரை 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சுமார் 250 பேர் அரசுப் பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தகுதித் தேர்வு மதிப்பெண்களை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தகுதியுடன் பணிக்காக காத்துக்கொண்டிப்போர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நிரப்பப்பட உள்ள 425 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி