போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 1 நாள் சம்பளம் கட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2015

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 1 நாள் சம்பளம் கட்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் 1 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்தநாள் முதல் பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2011 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கம் செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் அக்டோபர் 8-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி ஜாக்டோ அமைப்பினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு துண்டுபிரசுரம்விநியோகம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 754 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 141 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள்,289 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,221 பள்ளிகள் இயங்குகின்றன.


இதில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன.இதனால் வியாழக்கிழமை பள்ளி பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.


இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பா. ரா. விஜயலட்சுமி புதன்கிழமை மாலை வெளியிட்ட செய்தி குறிப்பு:


காஞ்சிபுரம்மாவட்டத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் வழக்கம்போல் வியாழக்கிழமை செயல்படும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் நிலை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கூறியது:


புதன்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில், பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு சமாளிக்கப்படும். மேலும்பகுதிநேர ஆசிரியர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். இதனால் பள்ளிப்பணி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி