50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை;இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை;இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை; பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.


காலை, 8:00 மணிக்கே பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தற்செயல் விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டு, கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.சென்னை மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், வேன் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும், பணிகளை கவனித்தனர்; பல பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.மற்ற மாவட்டங்களில், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், 50 சதவீத ஆசிரியர்கள் வந்திருந்தனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை; மாணவர்களும் வரவில்லை.குறைந்த எண்ணிக்கையில் வந்த மாணவர்களுக்கு, வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், வருகை பதிவு குறிப்பிடப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.மொத்தத்தில், தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 10 ஆயிரம் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,நேற்று வகுப்புகள் நடக்கவில்லை.மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் :வேலைநிறுத்தப் போராட்டத்தில், பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அதனால், ஜாக்டோ கூட்டுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜுலு கூறியதாவது:

திருவாரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மற்ற இடங்களில், தங்களை அதிகாரிகளாக நினைத்துக் கொள்வதால் பங்கேற்கவில்லை.தலைமை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னையோ, பதவி உயர்வு பிரச்னையோ இல்லை. மாறாக, இலவசத் திட்டங்களைக் கவனிக்க, தனி அலுவலர் இல்லாமல், கடுமையாக பாதிக்கப் படுகிறோம். ஆண்டில் மூன்று பருவங்களுக்கு, குறைந்தது, 30 முறையாவது இலவசத் திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், கல்விப் பணிகள் பாதிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக நிலவரம்:

சென்னை, கோவை, நெல்லை உட்பட, பல மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்கள் நடத்தப்படவில்லை.

சென்னையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள், பணியை புறக்கணித்தனர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்ஓரளவுக்கு வகுப்புகள் நடந்தன.

நாகையில்பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை; திறந்திருந்த ஒரு சில பள்ளிகளும், மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடின. திருவாரூர் மாவட்டத்தில், 5,432 ஆசிரியர்களில், 4,418 பேர் பணிக்கு வரவில்லை.

திருப்பூரில், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பல வகுப்புகளின் மாணவர்களை, ஒரே வகுப்பில் அமர வைத்து, மதிய உணவுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர்.

நீலகிரி மற்றும் கோவைமாவட்டங்களில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விட, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.இந்தப் போராட்ட வெற்றி, எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்துள்ளது. இனியும், எங்கள் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காமல் இருக்கக் கூடாது.இளங்கோவன் ஜாக்டோ மாநிலஒருங்கிணைப்பாளர்.

புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பணியைப் புறக்கணித்தனர். சாமி.சத்தியமூர்த்தி பொதுச்செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சங்கம்.பள்ளியை மூடுவது எங்கள் நோக்கமல்ல. பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் வெற்றியை காட்டி விட்டனர்; அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.பேட்ரிக் ரைமண்ட்மாநில தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

தமிழகத்தில், 95 சதவீத தொடக்கப் பள்ளிகள் இயங்கவில்லை; இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடு செய்தாலும், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை நடத்த ஆட்களே இல்லை. ரெங்கராஜன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

51 comments:

  1. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier There are no further orders of listing

    Last updated on Oct 8 2015

    ReplyDelete
  2. Velaila iruka teachersye mathikkala.... Puthusa poraduna ayyo sami....

    ReplyDelete
  3. This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.

    ReplyDelete
    Replies
    1. அவங்க இடத்துல நீங்க இருந்தா இத தான் செய்வீங்க cluster .....

      Delete
    2. Dai salem cluster nee periya pudinki maathiri pesatha.ellam theriuma unakku. Arasiyalvaathigal lancham vanki kittu private school opan panna vitta.govt school teachers ellam thiramai illanu artham illa...

      Delete
    3. Dai salem cluster nee periya pudinki maathiri pesatha.ellam theriuma unakku. Arasiyalvaathigal lancham vanki kittu private school opan panna vitta.govt school teachers ellam thiramai illanu artham illa...

      Delete
  4. This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.
    If Govt conduct TET for working teacher. Only 20% only pass the exam.

    ReplyDelete
    Replies
    1. சேலம் நண்பரே நீங்கள் என்ன அதி புத்திசாலியா .இடைநிலை ஆசிரியர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா 19000மட்டுமே எல்லாம் தெரிந்தவர் போல comments செய்யாதீர்கள் அவ்வளவு எளிதாக ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது இந்த அரசால் .அவர்கள் இரண்டு மாதத்திற்கு முன்னரே அரசுக்கு notice கொடுத்த பிறகு தான் வேலை நிறுத்தம் செய்து உள்ளனர் .அவர்களது உரிமையை அவர்கள் கேட்கிறார்கள் உங்களுக்கு எங்கு எரிகிறது .

      Delete
    2. ஹலோ சார் , அரசு ஆசிரியர்கள் ஒழுங்காக சொல்லித்தந்து இருந்தால் இவ்வளவு தனியார் மெட்ரிக் பள்ளி வருமா? . தயவு செய்து நாகரிகமான வார்த்தையை பயன்படுத்துங்கள் . எரிகிறது என்ற வார்த்தை அனக்ரிகமனது .

      Delete
    3. Onume theriyama comment podatheenga.....

      Delete
    4. இதே இடைநிலை ஆசியரிடம் படித்துதான் இந்தநிலைக்கு உயர்ந்துள்ளோம் நாங்கள் சம்பளம் கூடுதலாக கேட்கவில்லை சம்பள முரன்பாடுகளைதான் நீக்க கூறுகிறோம்

      Delete
    5. WHEN 2010 CV CASE JUDGEMENT ANYBODY KNOW?

      Delete
    6. Unakku theramai illama thane arasu palli aasiriyar aaga mudiyala. thiramaiyaavanga than ippa arasu palli aasiriyara irukkanga...

      Delete
    7. டேய் புறம்போக்கு ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையை நல்லா படிச்சிப்பாருடா. சம்பளம் போதலையினு எங்கடா கேட்கிறாங்க?. உனக்கு திறமையிருந்தா அரசு ஆசிரியர் வேலைக்கு போடா சொறி பிடிச்ச நாயே.

      Delete
    8. well said Mr.Ramachandran sir & Murugan sir...

      Delete
  5. Second Grade salary 5200+2800+750 only..... Matha state la 9300+4200 atha than kekkuranga... Purinjukonga... Vera yarume sambalam uyarthi kettkala.....

    ReplyDelete
  6. Salem cluster அரசு ஆசிரியரின் அறிவுக்கு முன்னால் நீ,,,,****##@@@@&-+(((()))&%%$

    ReplyDelete
    Replies
    1. govt. teachers always knowledged but use pantrathilla.

      Delete
  7. யார்ரா அந்த சேலம் ....அவனே....&&&@@??/-$££#{}[{....$<#%\~>£$%}~>]__~₹;:-

    ReplyDelete
  8. Arasu palli aasiririyargal mathiya arasuku inaiyana oodhiyam ketpadho ondrinaindhu poraduvadho thavaru alla.

    Satru aalamaga parthal thangal padipuku inaiyaga padithu thaniyar palliyil verum 5000 sambalam perubar mathiyil ungal poratam sari ena enugireergala?

    Paniyai vitu anupa 2 months before notice anupa vendum ena koorum neengal thodarndhu oru varam paliku selavilai endral karanam solamal paniyai vitu anupapadum private school teachers ai patri yosithu parungal.

    Arasu palligalil kalvithagudhi kuraiya yar karanam?

    Podhumana basic facility illai.so admission low ah irukunu karanam soldromey thavira 6 th padikura manavanuku Tamil letters kooda therila.strike pana ovouru school ah poi aadharavu kekureenga.but than kadamaiyaiyum sariyaga seiyadha sila teachers irukathan seiranga,so adhu pondra teachers yarena kandarindhu karpithalil kuraipadugal uladhu ena pagirangamaga othukolveergala.?

    Namaku keeley ulavar kodi ninaithu parthu nimadhi nadu enbadhai marandhu vidadheer.

    Ungal 15 amsa korikagaigal niyayamana ondrey. Aanal adhil ondru kooda ungaluku sambalam petru tharum manavargalukaga ilaadhathu than migundha vedhanai allikiradhu.

    Oomaiyai irukum varai ulagam unai gavanikadhu enbadhu unmai than.

    Ungal palliyil payilum adithatu manavargalukagavum oru sila korikaigalai serthu vaithu poradinal podhu makkal matrum petrorin aadharavum ungalin madhipum uyarum allava?

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் கேட்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி 15 கோரிக்கைகளில் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள் உண்டா? என்பதுதான்.உண்டா இல்லையா என்பது வேறு விவாதமாகக் கூட இருக்கலாம்.கோரிக்கைகளின் முழு சாராம்சம் தெரிந்தவர்களுக்கு புரிந்துள்ளது உண்டு என்று.

      ***என்றாவது ஒரு நாள் மாணவர் நலன் சார்ந்த போராட்டங்களை நடத்தியதுண்டா எனக் கேட்கும் நண்பர்களுக்கும் சில போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் வைக்கப்படும் சில கேள்விகள்....

      ***தனக்குத் தேவையானதை அவரவர் தானே போராடிக் கேட்பர் அதுதானே எல்லாத் துறையினராலும் நடத்தும் போராட்ட வழிமுறை ஆசிரியர்களின் போராட்டத்தினை மட்டும் வேறுவழிக்கு மாற்றச் சொல்வது ஏன்.?

      ***தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தோடு ஒப்பிட்டுப் பேசும் நண்பர்களே! கோடி கோடியாய் வாங்கிக் குவிக்கும் முதலாளிகளிடம் போய்க் கேளுங்கள் ஏன் இவ்வளவு வேலை வாங்கிவிட்டு இவ்வளவு தான் ஊதியம் கொடுக்கிறீர்களே என்று.உங்களால் கேட்க முடியாது

      ***மாணவர் ஆசிரியர் நலன் சார்ந்த போராட்டங்களை இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் போராட்டக் களத்திலேதான் இருக்க வேண்டும் மாணவர்களுடன்,

      அப்போதும் நீங்களே கேட்பீர்கள் முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய நீங்களே மாணவர்களை இப்படி வழி நடத்தலாமா என்று?

      ***வேலை நிறுத்தம் தவறு என்கிறீர்களே நீண்ட நாள் கோரிக்கையை வென்றெடுக்க மாற்றுவழி இருந்தால் மறக்காமல் சொல்லிவிடுங்கள்...

      ***வாங்கும் ஊதியம் போதும் என்றால் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் களம் காண வேண்டிவரும் ஏற்பீர்களா??


      ***தரம் தரம் என்கிறீர்களே! உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான்கு சுவருக்குள் அமர்ந்திருப்பதால்,..?
      அரசுப் பள்ளியில் படிப்பவனின் பிண்ணனி பற்றி....

      உரிமையை விட்டுக் கொடுக்காதே என்று கற்றுத் தந்த எங்களையே கேட்காதீர் இப்படிச் செய்யலாமா என்று????

      Delete
  9. வழக்கு 26.10.2015 வரவுள்ளது உன்மையான தகவல் Tet case

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேஷ்

      Delete
    2. Enaku kidaitha thagavalum 26 andru valaku visaranaiku vara avanaseyapatulathaga.monday uruthi seiyapadum

      Delete
  10. Andravadhu yendha mudivadhu etapaduma ilai valakam pola vaidha than alikapaduma mathesh sir.?

    Mr.vincent counter file seidhu vitara?

    Udaney padhividavum nanba!

    ReplyDelete
  11. I HAVE CHECKED 26.10.2015 SUPREME COURT OF INDIA ADVANCE LIST BUT OUR TET CAUSE NOT LISTED, DON'T SPREAD FAKE NEWS

    ReplyDelete
  12. வழக்கு போட்டது நான் வழக்கு எந்த தேதியில் வருகிறதுஎன்பது டெல்லியில் உள்ள என்னுடைய வழக்கறிஞர் சொல்லியது பொய்யான தகவல் பதிய வேண்டும் என்பது அவசியம் இல்லை

    ReplyDelete
  13. வழக்கு போட்டது நான் வழக்கு எந்த தேதியில் வருகிறதுஎன்பது டெல்லியில் உள்ள என்னுடைய வழக்கறிஞர் சொல்லியது பொய்யான தகவல் பதிய வேண்டும் என்பது அவசியம் இல்லை

    ReplyDelete
  14. Mr mathesh sir tet case varuda ellaya pls sollunga sir

    ReplyDelete
  15. Mr mathesh sir tet case varuda ellaya pls sollunga sir

    ReplyDelete
  16. என்னுடைய வழக்கிற்க்கு நான் பொய்யான தகவல் பதிவிட அவசியம் இல்லை

    ReplyDelete
  17. Mr.M.Mathesh Kindly check supreme court of india advance list 26.10.2015 after ask me if you have mail, i will forward that list....

    ReplyDelete
  18. B.ed Computer science posting. Any news.....pls

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Mathesh sir
    theerpu eppadi varum endru solla mudiyuma as per the present situation
    Saisubaskar@gmail.com
    9751022875

    ReplyDelete
    Replies
    1. நிங்கள் வழக்கு போட்டி இருந்தால் உங்கள் வழக்கறிஞரை அனுகவும் எந்த மாதிரியான திர்ப்பு வரும் என்று

      Delete
    2. எங்க வக்கீல் என்னா சொல்றார்னா அரசுக்கு சாதகமாகவே வழக்கு முடியும்னு சொல்கிறார்..

      Delete
    3. யார்க்கிட்ட வழக்கு போட்டிங்க உங்கள் பெயர் சொல்லலூங்க நிங்கள் வழக்கு தொடராதவர்

      Delete
    4. ஆமாம்.வழக்கு தொடுத்தவர் வேனா நீங்களாக இருக்கலாம் ஆனால் வரப்போகிற தீர்ப்பு அனைவருக்கும் பொதுவானதே..

      Delete
    5. Epa ena tha sollavarenga kadaisiya

      Delete
  21. Replies
    1. மாரி நீங்கள் TET ல் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று உள்ளீர்கள்?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி