உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? - TATA Federation - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? - TATA Federation

ஊதிய பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக 6 வது ஊதிய முறன்பாடு அரசு தீர்க்க முடியாது.கல்வி துறை சார்பாக டாட்டா சங்க சங்கம் SLP-9109 /2015. ல் I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.



உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ?
இதோ தடை ஆணை ...யார் போராட்டம் செய்தாலும் சென்னை மாநில செயற்குழுவில் எடுத்த முடிவு படி டாட்டா முழு ஆதரவு .தமிழ் நாட்டில் 6 வது ஊதிய குழு அரசு ஆணை 234 நிதி நாள் .1.6.2009ன் படி நடைமுறை படுத்தப் பட்டது .அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பெற்று வந்ததை விட ரூ 370 குறைவாக நிர்ணயம் செய்யப் பட்டது.தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 நிதி .நாள் 27.6.2009 ன் படி 1.1.2006 முதல் 31.5.2009 முடிய பணி நியமனம் பெற்றவர்கள் 1.86.என்ற விதியை பயன் படுத்தி ஊதியத்தை பெருக்கி நிர்ணயம் செய்து கொள்ள ஆணையிடப்பட்டது .அதன் பின் அரசு ஆணை 444 ன் படி ஊதிய பிரச்சனையை தீர்க்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அரசின் கைபாவையாக செயல் பட்டு முரண்பாடான அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிமன்றத்தை நாடினர் .


நீதிமன்ற தீர்ப்பு படி அரசு ஆணை 123 ன் படி 3 நபர்களை கொண்ட ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது .இந்த குழுவும் 4342 பேரிடம் 4 நாளில் விசாரணை செய்து முரண்பாடான பொய்யான அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டது..டாட்டா சங்கம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு ஆதரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்தது..மேலும் இணையம் மூலம் சேகரித்த தகவலை வெளியிட்டு அனைவரயும் விழிப்படைய செய்த சங்கம் டாட்டா மட்டுமே .27.2.2014 ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு படி 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 ஊதிய குழு முரண்பாடுகளை தீர்க்க ஆனையிடப்பட்டது..தமிழக அரசின் 6 வது ஊதிய குழு தவறானது என உயர் நீதிமன்றத்தில் 3642 பேர் வழக்கு நடத்தி உள்ளார்கள் .மேலும் 72,000 இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனைக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு டாட்டா வும் ,எஸ் எஸ்.டி எ மட்டுமே நடத்தியது .தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு டாட்டா மட்டுமே சென்று உள்ளது. 5.5 இலச்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் 6 வது ஊதிய குழு வுக்கு எதிராக சமரசம் இல்லாமல் வழக்கு நடத்துவது டாட்டா சங்கம் மட்டுமே .அன்பர்களே ஜேம்ஸ் என்ற ஒரே ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலர் மட்டுமே 2011 ல் இருந்து சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடத்தி இன்று தர ஊதியத்தில் 200 ரூபாய் உயர்வு பெற்று உள்ளார்கள் ஒட்டு மொத்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வில்லை .


எனவே சாட்சி டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் .அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 9300+4200 என ஊதிய மாற்றம் ஏற்படும் .மேலும் TET வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழ் நாட்டில் தகுதி தேர்வு நடத்த முடியவில்லை ,பணி நியமனம் செய்ய முடியவில்லை .அது போல் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குவழக்கு முடியும் வரை பணிமாறுதல் முடியவில்லை .அது போல் 6 வது ஊதிய பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு ஏற்படாத வரையில் தமிழ் நாட்டில் 7 ஊதிய குழு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது .இந்த நிலை ஏற்பட காரணம் தமிழக அரசு தான் கரணம் ஆகும் .மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் 6 ஊதிய குழு பிரச்சனைக்கு இறுதி முடிவு வந்த பின்புதான் 7 ஊதிய குழு தமிழ் நாட்டில் அமைக்க முடியும் .இதற்கு காரணம் டாட்டா வின் சட்ட போராட்டம் தான்.எனவே கண்டிப்பாக நமக்கு சட்ட போராட்டத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதை அனைவருக்கும் தெருவித்து கொள்கிறேன் .


டாட்டா கிப்சன் .9025054081//9443464081..

10 comments:

  1. Teachers wanted
    BT-Assistant (English-BC)
    BT-ASS (MATHS-SC)
    BSc and BA, BEd.TET 90marks
    above.In tirunelveli
    Male and female with Hindus only
    And
    clerks-SSLC
    immediately call me
    8015155610..

    ReplyDelete
  2. if anyone want mutual from perambalur,ariyalur,cuddlore districts to madurai dt especially uslampatti block contact 7418868922

    ReplyDelete
  3. the above mutual is english bt asst

    ReplyDelete
  4. Kanchipuram to Kanayakumari mutual transfer BT English

    ReplyDelete
  5. ஒற்றுமையே பலம்.

    ReplyDelete
  6. அருமை...அருமை....மிக மிக மிக அருமை...!

    ReplyDelete
  7. anybidy know 2010 cv case detail please sir soluka sir please

    ReplyDelete
  8. Anybody wants to mutul to madras
    B.t.assi history. Contract 9003638902.

    ReplyDelete
  9. May 2010 cv case judgement will come next week

    ReplyDelete
  10. I working in erode social BT I want Salem dt
    So anybody s mutual

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி