பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2015

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமானபட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வைநிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை.


இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர். இதனால், 928 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பவில்லை.இந்த காலி இடங்களை நிரப்ப, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் அடங்கிய, புதிய முன்னுரிமை பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் இடையே, சலுகை, சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. பதவி உயர்வை ஏற்றால், வேறு ஊருக்கு மாற்றலாக வேண்டுமே என பயந்து, பதவி உயர்வை வேண்டாம் என உதறி விடுகின்றனர்.விரைவில் நடத்த உள்ள பதவி உயர்வு கலந்தாய்விலும், அனைத்து இடங்களும் நிரம்புமா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.


பாட வாரியாககாலியிடங்கள் விவரம்


தமிழ் 100

ஆங்கிலம் 160

கணிதம் 80

இயற்பியல் 100

வேதியியல் 70

தாவரவியல் 63

விலங்கியல் 70

வரலாறு 143

வணிகவியல் 73

பொருளியல் 69


மொத்தம் 928

3 comments:

  1. Do we have BT counselling this year? If so when? Kindly update if anyone know

    ReplyDelete
  2. Pg trb varuma varumanu yara ketkuriga bro....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி