பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடர்: தமிழக அரசுக்கு கருணாநிதி யோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடர்: தமிழக அரசுக்கு கருணாநிதி யோசனை

உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவின் மூலம் கொள்முதல் செய்து, பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடராக வழங்க வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் சமீபகாலமாக பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் குறைத்துவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு வரப்படும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும்,கொள்முதல் செய்த பாலுக்கான பணத்தை உடனடியாக வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுகிறது.இடைத்தரகர்கள் மூலம் தனியார் வியாபாரிகள் பாலை கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் சாலைகளில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் போராட்டத்தை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. ஆவினில் நடந்த முறைகேடுகள் வெளிவந்து அத்துறையின் அமைச்சர் நீக்கப்பட்டார். முக்கியப் பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இப்போது அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.பால் உற்பத்தி தற்போது 2.02 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. ஆனாலும், ஆவின் தினமும் 30 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆவின் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.28-க்கு வழங்குகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் ரூ.22, ரூ.16 என குறைந்த விலைக்கே வாங்குகின்றன. இதனால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 628 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.


இதைத் தவிர்க்க ஆவின் நிர்வாகமே பாலை கொள்முதல் செய்து பவுடராக்கி சத்துணவு சாப்பிடும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கமும் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளே எடுத்துச் சொல்ல வேண்டும் என காத்திருக்காமல் அரசே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி