மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2015

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


அந்த பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ விருப்பம் இல்லாததற்கான கடிதத்தை, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.'மேல்நிலை தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டாம்' என தெரிவித்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகபணியேற்க அனுமதிக்க கூடாது.மேலும் தலைமைஆசிரியராக பொறுப்பேற்கும் முன், அவர்களின் கல்வித்தகுதி, வரையறுக்கப்பட்ட துறைத்தேர்வுகளின் தேர்ச்சி போன்ற விபரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி