'திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2015

'திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'

தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில், 9 நாள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சொந்த ஊர் அல்லாத வெளிமாவட்டங்களில் பணிபுரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும், 2016ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 23 நாட்கள் இடம் பெற்றுள்ளன. 

அதில், புத்தாண்டு தினமான ஜனவரி, 1ம் தேதி, பொங்கல் பண்டிகை ஜனவரி, 15ம் தேதி, புனித வெள்ளி, மார்ச், 25ம் தேதி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல், 1ம் தேதி, தெலுங்கு வருட பிறப்பு ஏப்ரல், 8 ம்தேதி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.

ஆகஸ்ட், 15ம் தேதி சுதந்திரதினமும், செப்டம்பர், 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியும், அக்டோபர், 10ம் தேதி ஆயுத பூஜையும், டிசம்பர், 12 மிலாடிநபியும், திங்கள் கிழமை வருகின்றன. இதனால், சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறையுடன் தொடர்ந்து, மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது. வெளி மாவட்டங்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக விடுமுறை வந்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி