பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2015

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின்உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:


மழை-வெள்ளத்தில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கபட்டன. ஏற்கெனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ளகட்டடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். முழுமையாக ஆய்வும் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.


விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜனவரி 22-க்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி