'புளூ பிரின்ட்' எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2015

'புளூ பிரின்ட்' எப்போது?

தமிழகத்தில், 2006ம் கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலாகியுள்ளது. அதனால், 'ஓரியன்டல்' எனப்படும், சிறுபான்மை அல்லது அயல்மொழிகளில்படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக, தமிழைப் படிக்க வேண்டும்.


இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், தங்கள் தாய்மொழியை படிக்காவிட்டால், தங்கள் மாநில வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என, அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, தங்கள் தாய்மொழித் தேர்வையும், விருப்ப மொழிப் பாடமாக எழுதலாம் என, அரசுஉத்தரவிட்டுள்ளது.இதன்படி, தெலுங்கு, மலையாளம், உருது, இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச், கன்னடம், குஜராத்தி, அரபி என, ஒன்பது பாடங்களில் ஒன்றை, மாணவர்கள் எழுதலாம் என, இரு வாரங்களுக்கு முன்தேர்வுத்துறை அறிவித்தது.ஆனால், இந்த மொழி பாடத்துக்கான பொதுத் தேர்வு குறித்த, வினாக் கட்டமைப்பான, 'புளூபிரின்ட்' வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது; அதனால், எந்த முறையில் கேள்விகள் இடம் பெறும் எனத் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி