எளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2015

எளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


வேலைக்காக வெளிநாடு செல்லும் பொதுமக்களிடம் ஈ.சி.என்.ஆர். (குடியுரிமை ஆய்வுச்சான்று அவசியம் இல்லை) பாஸ்போர்ட் பெறுவதற்கு தனியார் முகவர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.


அவ்வாறு ஏமாற்றப்படும்பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம்.ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெற அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இதற்கு, ரூ.1,655 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படும் விண்ணப்பத்தை அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுடன் வருமான வரி செலுத்திய ரசீது, நிரந்தரக் கணக்கு வைப்பு எண், வேலை தொடர்பான ஆவணங்களையும் இணைத்து வழங்கவேண்டும்.ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி