10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் திருச்சி மத்திய சிறையின் 67 கைதிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2016

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் திருச்சி மத்திய சிறையின் 67 கைதிகள்

திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளில், 67 பேர், நடப்பாண்டு, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் சென்னை புழல், வேலுார், சேலம், கடலுார், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறையில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 20,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.


வழக்கில் தண்டனை பெற்று வரும் குற்றவாளிகளை திருத்தி,எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட, மத்திய சிறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இது தவிர, சிறையிலுள்ள கைதிகள் பள்ளிக் கல்வி முதல், பட்டப் படிப்பு பயில வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. இதற்காக, மத்திய சிறையில் சிறப்பு வகுப்புகளும், படிப்பதற்கான புத்தகங்களும் வழங்குவதுடன், நுாலகத்தையும் ஏற்படுத்தி உள்ளனர்.ஆண்டுதோறும் பள்ளி பொதுத்தேர்வு முதல், பட்டப் படிப்பிற்கான தேர்வு எழுதும் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள, 67 கைதிகள், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

இது குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறியதாவது:திருச்சி மத்திய சிறையில் விவசாயம், சோப்பு தயாரித்தல், ரெடிமேட் ஆடை உற்பத்தி, நாப்கின் தயாரிப்பு, உணவுப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டு, கைதிகளுக்கு பயிற்சியும், வேலை வாய்ப்பும் வழங்குகிறோம்.தவிர, எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2, பட்டப்படிப்பு, மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகள் படிக்க விரும்பும் கைதிகளை ஊக்கப்படுத்தி, படிக்கவும் வைக்கிறோம்.நடப்பாண்டு ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 60 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுத ஏழு பேருமாக, 67 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் படிப்பதற்கான அனைத்து வசதிகளை செய்துள்ளோம். கடந்தாண்டைவிட, 25 சதவீதம் பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி