100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2016

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை

'தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரைவழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர் ஓட்டளிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதி செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தினர். மேலும், தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள மென்பொருள் மற்றும் தேர்தல் நிர்வாகம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி