போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2016

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.


அப்போது ராமசாமி, சிவராஜ் இருவரும் பணியில் சேருவதற்காக 10-ஆம் வகுப்புசான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தனர். இந்தச் சான்றிதழ்கள் கோவையில் உள்ள தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ராமசாமி, சிவராஜ் இருவரும் கொடுத்த 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் இருவர் மீதும் மடத்துக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் 2-இல் நடைபெற்று வந்தது. இதில், போலியான சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக ராமசாமி, சிவராஜ் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்ற நடுவர் சுதா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதில், அரசு வழக்குரைஞராக பி.சிவசுப்பிரமணியம் ஆஜரானார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி