அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு:பாமக புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2016

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு:பாமக புகார்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என பாமக குற்றம்சாட்டியது.


பாமக மாநில துணைத் தலைவர் வடிவேல், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்தியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள அசுஉதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆசிரியர் நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை மிறி நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர் பணிநியமனத்தில் பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 160 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் கடந்த வாரத்தில் 13 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளன. இதில், தகுதியில்லாத நபர்கள் அரசுவிதிமுறைகளுக்கு உள்படாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.தற்போது போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியில்லாதவர்கள் ஆதாயத்தின் அடிப்படையில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், பள்ளிக் குழந்தைகளில் கல்வி பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகும். தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புஅடைந்துள்ளனர்.எனவே, நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் வெளிப்படையான தன்மை நிலவ வேண்டும். இதில் அரசுவிதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி