அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2016

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம்மற்றும் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி,


மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் 60 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 30 நடுநிலைப் பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி