பேராசிரியர் நியமனம்; இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2016

பேராசிரியர் நியமனம்; இன்ஜி., கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பாக, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சில விதிமுறைகளைஅறிவித்துள்ளது.இதற்கு சில தரப்பில், எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எம்.இ., மற்றும் இன்ஜினியரிங் பிரிவில், பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்களாக நியமிக்கப் படுகின்றனர்.


சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது, எம்.இ., முடிந்த பேராசிரியர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால்,எம்.எஸ்சி., அல்லது எம்.சி.ஏ., படித்தவர்கள், அதன்பின், எம்.இ., படித்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர்களாக சேர்ந்தனர்.இப்படிப்பட்டவர்களால், பாடங்களை முழுமையாக கற்றுத்தர முடியவில்லை என, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆய்வு நடத்திய, ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது. இதன்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., படித்து, அதன்பின் எம்.இ., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பில் பல குளறுபடிகள் உள்ளன. 2010ம் ஆண்டோ, அதற்கு முன்னரோ, இன்ஜினியரிங் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் போதே, இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், படித்திருக்க மாட்டோம். மாறாக படித்து முடித்த பின், ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்து புதிய விதிமுறை அமலாகும் என, அறிவித்திருப்பது நியாயமற்றது. வேலை தேடும் பட்டதாரிகள்


புதிய விதிமுறைகள்


கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்து, தொடர்ந்து, எம்.சி.ஏ., அல்லது எம்.எஸ்சி., பட்டம் பெற்று, பின் எம்.இ., தேர்ச்சி பெற்ற வர்களை, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர்களாக நியமிக்க முடியாதுஅதேபோல, பி.இ., முடித்து, எம்.இ., படித்த பட்டதாரிகள், பி.இ.,யில், ஒரு பாடப்பிரிவு, எம்.இ., யில் ஒரு பாடப்பிரிவு என, மாற்றி மாற்றி படித்திருந்தாலும், அவர்களையும் பேராசிரியராக நியமிக்க முடியாதுபி.இ., - பி.டெக்., முடித்து, எம்.எஸ்., படித்தவர்களையும், பி.இ., படித்து நேரடியாக, ஆராய்ச்சி பட்டமான பிஎச்.டி., முடித்தவர்களையும், ஒருங்கிணைந்த, ஐந்து ஆண்டு பி.இ., -- எம்.பி.ஏ., முடித்தவர்களையும் பேராசிரியர் பணிக்கு அமர்த்தலாம்இதே போல், ஒரே பாடத்தில், இரட்டை பட்டப்படிப்பு முடித்த, எம்.இ., பட்டதாரிகளையும் வேலைக்கு சேர்க்கலாம்2010ம் ஆண்டுக்குப் பின், பணி அமர்த்தப்பட்டவர் களுக்கு, இந்த நிபந்தனைகள் பொருந்தும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி