அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா?: ராமதாஸ் அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2016

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா?: ராமதாஸ் அறிக்கை

எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொருபிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார்.


அதனால் தான் 5ஆண்டுகளாக எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் நான் பங்கேற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். அதன்பிறகும் அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளை ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும் நடத்தவுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் ஒரு கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.அதேபோல், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 60 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிப்ரவரி 8&ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

அந்த போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால் ஒட்டுமொத்த நிர்வாகமும் நிலைகுலைந்து விடும். தமிழகத்திற்கோ, தமிழக மக்கள் நலனுக்கோ இது எந்த வகையிலும் நல்லதல்ல.தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறை மூலம் கைது செய்திருக்கிறது. அதேபோல், தங்கள் கோரிக்கைகள் பற்றி விளக்குவதற்காக சந்திக்க வந்த அரசு ஊழியர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் பல மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தங்களை சந்தித்த அரசு ஊழியர்களிடம் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

 இதனால் அரசு ஊழியர்களின் உண்ணாநிலை போராட்டம் உறுதியாகியுள்ளது.2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில்,‘‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றவில்லையோ, அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தம் மேற்கொண்ட அரசு ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்ததுடன், ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தஜெயலலிதா, இன்னும் திருந்தவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஜெயலலிதா வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்ற மாட்டார்.தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசி, சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளார். பா.ம.க. ஆட்சிக்குவந்தவுடன் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதிஅளிக்கிறேன்.

26 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 2011my family 8 votes ammavuku. 2016my family 8 votes pmkvukku..or..dmkvukku..engalin korikkai neraivatrinal vote ammavukkuthan.

    ReplyDelete
  3. In my family,there are 23 members joont family but this time purely our votes will be only for மாண்புமிகு அருயிர் சகோதரர் திருமாவளவர் மற்றும் வைகோ .thats sure

    ReplyDelete
  4. nowadays the peoples are supporting the parties on the basis of community that means we are also belongs to one of the community,andso we can go ahead accirdingly.instead of beging anybody we can die hardly with aim, we want equal as like human

    ReplyDelete
  5. nowadays the peoples are supporting the parties on the basis of community that means we are also belongs to one of the community,andso we can go ahead accirdingly.instead of beging anybody we can die hardly with aim, we want equal as like human

    ReplyDelete
  6. In my family,there are 23 members joont family but this time purely our votes will be only for மாண்புமிகு அருயிர் சகோதரர் திருமாவளவர் மற்றும் வைகோ .thats sure

    ReplyDelete
  7. இந்த இணையதளம் யாருக்கு உங்கள் வாக்கு என்பதை பதிவிட உருவாக்கப்படவில்லை. உங்கள் வாக்கை உங்கள் விருப்பம் போல் தேர்தலில் பதிவிட உங்களுக்கு தார்மீக உரிமை உண்டு. அதை ஏன் இங்கு சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  8. tet case eppo sooriyansiva sir?okva

    ReplyDelete
    Replies
    1. No idea Sir. நான் TNPSC Group 4 ல் தேர்ச்சி பெற்று Revenue Department ல் நாளை பணியில் சேரப் போகிறேன். TET க்கும் எனக்கும் சற்றும் தொடர்பில்லாத ஒன்று.

      Delete
  9. What is going on here......is it kalviseithi...or...

    ReplyDelete
  10. மாற்றம் ஒன்றே மாறாதது மாறாதது..,

    ReplyDelete
  11. Lab assistant pathi adavathu teryuma

    ReplyDelete
  12. Lab assistant pathi adavathu teryuma

    ReplyDelete
  13. trs don't fight,prove your strength in election

    ReplyDelete
  14. our feelings is true,but don't fight ourselves

    ReplyDelete
  15. our feelings is true,but don't fight ourselves

    ReplyDelete
  16. trs don't fight,prove your strength in election

    ReplyDelete
  17. Private schools give less salary to improve the strength and quality of edn. Jaya and sec. Sabitha appointed trs in high salary to wipe out govt school from Tamilnadu

    ReplyDelete
    Replies
    1. எந்த விதை போடுகிறோமோ அது தான் முளைக்கும்.தனியார் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கட்டணம் தான், ஏன் எல்லோருக்கும் மருத்துவ கல்லுரிக்கு இடம் கிடைக்கவில்லை ?

      Delete
    2. எந்த விதை போடுகிறோமோ அது தான் முளைக்கும்.தனியார் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கட்டணம் தான், ஏன் எல்லோருக்கும் மருத்துவ கல்லுரிக்கு இடம் கிடைக்கவில்லை ?

      Delete
  18. Let them rule five more years, All trs work in private school s. No govt schools . School building will be used as Sticker factory.

    ReplyDelete
  19. சார் இவங்க சொல்ரது தான் உண்மை.... ஜெயகவிதாபாரதி தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்கு எல்லோரையும் நல்லபயன்படுத்துது.... இவங்களுக்கு வேலை கிடைக்கலனா தடையாணை வாங்குவாங்காலாம்.... இன்னும் நம்புங்க இல்ல நம்பாம பொங்க???

    அட லூசுகளா இவங்க என்னைக்காவது வெய்ட்டேஜை கேன்சல் பன்னனும்னு கோரிக்கை வச்சிருக்க யோசிங்க ?????

    ஜெயகவிதாபாரதி வழக்கை திசைதிருப்ப முயற்சி செய்றாங்க....

    இன்னும் புரியலனா எல்லோரும் சென்னைக்கு பொங்க எம்.எல்.ஏ சீட் வாங்கிதருவாங்க??

    ReplyDelete
  20. Hello Rajalingam sir,don't blame Jayabharathi mam,she tried her best.you please try to arrange for a big strike in Chennai with media support as soon as possible,let it be the last but not least.Every private teacher Above 90 will definitely support you.please arrange for a meeting soon there is no time to discuss like this 👍.




    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி