திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு: ஸ்டாலின் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2016

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தை திடீரென்று அவர்கள் துவங்கவில்லை.


அரசுக்கு முறைப்படி அறிவிப்பு கொடுத்து, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கழக ஆட்சியின் போது அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டு அறிந்து அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண"கமிட்டி ஆப் அப்பீல்" என்று உயரதிகாரிகள் கொண்ட அமைப்புஉருவாக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் அந்த அமைப்பே செயல்படவில்லை. அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் முயற்சியே எடுப்பதில்லை.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்ஸுகள், தொழிலாளர்கள், சத்துணவு ஊழியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆட்சியின் பாராமுகத்தால் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக அரசின் நிர்வாகத்திற்கு அழகல்ல.

ஜாக்டோ மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளைப் பற்றி அதிமுக அரசு சங்கங்களை அழைத்துப் பேசி தக்க தீர்வுகள் காண அக்கறையோடு முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தவறினால் மே-2016க்கும் பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன்அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி தீர்வு காணப்படும் என்ற உறுதியை நான்இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

17 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

  2. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..
    பாடத்திட்டம் பின்வருமாறு:
    1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
    2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
    3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,
    4. நிலவரிவசூல்
    வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
    5.நிலச் சீர்திருத்தம்
    குடிவாராச் சட்டங்கள்
    6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள
    7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.
    8. புதையல்.
    9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.
    10. விபத்து நிவாரணத் திட்டம்.
    11. சாவடிகளைப் பராமரித்தல்.
    12. நிலமாற்றம்
    நிலஎடுப்பு
    13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
    14.பேரிடர் மேலாண்மை,
    15. நிவாரணப் பணிகள்,
    16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
    இருப்புப் பாதைகள்
    17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
    18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
    19.ஓய்வூதியத் திட்டங்கள்
    20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
    21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது
    22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
    23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
    24.கால்நடைப்பட்டி
    25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
    இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
    தொடர்புக்கு
    நிறுவனர் 86789 13626 ..

    ReplyDelete
  3. tet2013 pass seidha 72000 perukkum velai kodukka muyarchi pannunga stalin sir oruvelai neengal vandhal..............

    ReplyDelete
  4. நீங்க சொல்வது உண்மையா இருந்தா...welcome

    ReplyDelete
  5. STALIN AYYA Please conduct all TRB Exam in your Govt.

    ReplyDelete
    Replies
    1. only 50% exam 50% seniority nu solli erukar Stalin ayya.

      Delete
  6. அரசியல்லல இதல்லாம் சாதாரணம்ப்பா.......

    ReplyDelete
  7. COME BACK

    By💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    Change

    ReplyDelete
  8. திமுக ஆட்சியிலேயே இந்த கோரிக்கைகள் பற்றி போராட்டம் நடத்தினோம் அப்போது கண்துடைப்பாக 750 கொடுத்தது இதே திமுக தான் ஓட்டிற்காக ஸ்டாலின் இதை சொல்லிருக்கிறார் போலிருக்கு

    ReplyDelete
  9. இந்த போராட்டத்திற்கு காரணமே திமுக தான் ,திமுக ஆட்சியில தான் இப்படி சம்பளத்தை கெடுத்துட்டு இப்போது ஒன்று ம் தெரியாத மாதிரி நீலி கண்ணீர் வடிக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள் இவர்கள் கொடுக்காமல் விட்டு விட்டு இப்பொழுது நாடகம் நடத்தி நம்மையெல்லாம் முட்டாளாக்க பார்கிறார்கள்

      Delete
  10. இந்த போராட்டத்திற்கு காரணமே திமுக தான் ,திமுக ஆட்சியில தான் இப்படி சம்பளத்தை கெடுத்துட்டு இப்போது ஒன்று ம் தெரியாத மாதிரி நீலி கண்ணீர் வடிக்கிறார்

    ReplyDelete
  11. அரசியல்வாதிகளே கொஞ்சம் கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தையும் பாருங்கள். எங்களுக்கும் வாக்குரிமை உண்டு.

    ReplyDelete
  12. ஸ்டாலின் தமிழக அரசியல் களத்தில் உள்ள தலைவர்களில் கறைப்படாத கரத்துக்குச் சொந்தமானவர்....நேர்மையாளர்,சிறந்த நிர்வாகம் தெரிந்தவர்...அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  13. 500=====750========pichaaa potathu Aruuuu........DMK than a.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி