13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2016

13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு

மதுரை: தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 13 இடங்களில், மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஓராண்டாக சீனியர் விரிவுரையாளர்கள் தான் 'பொறுப்பு' முதல்வர்களாக இருந்தனர்.


இவர்களின் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும், பதவி உயர்வு அறிவிப்பில் இழுபறி நீடித்தது.ஒரே நாளில் அவர்கள் அனைவருக்கும் முதல்வர்களாக பதவி உயர்வு அளித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.அவர்கள் விவரம்: புகழேந்தி (மதுரை), சாந்தி (தேனி), ரஞ்சனி (ராமநாதபுரம்), கோல்டா கிளாரா ராஜாத்தி (நெல்லை), செந்தில் (துாத்துக்குடி), பிரபா தேவன் (கன்னியாகுமரி), வின்சென்ட் டிபால் (திருச்சி), செல்லத்துரை (புதுக்கோட்டை), பெரியசாமி (கரூர்), மணி (தர்மபுரி), விஜயகுமார் (சேலம்), அன்பழகன் (கடலுார்), மணி (சென்னை மாநில கல்வியியல் பயிற்சி நிறுவன துணை இயக்குனர்).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி