20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசுடன் உடன்பாடு ஏற்பட்டதால் சில சங்கங்கள் புறக்கணிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2016

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசுடன் உடன்பாடு ஏற்பட்டதால் சில சங்கங்கள் புறக்கணிப்பு.

அரசு ஊழியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளனர். 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் மற்றும் 36 சங்கங் களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர்ஆர்.தமிழ்ச்செல்வி கூறியதாவது:

அரசு ஊழியர்கள் தங்களது பல்லாண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளாக எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. ஆகையால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் 68 தோழமைச் சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து சங்கப் போராட்டக்குழுவின் சார்பில் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை புதன்கிழமை முதல் (இன்று) தொடங்குவதெனதீர்மானித்துள்ளோம் என்றார்.அரசு பேச்சுவார்த்தைஅமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததால் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்க மாட் டோம் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன.பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, தொழில் வரி ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் சென்னை சேப்பாக் கத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களின் போராட் டம் தொடர்பாக, தலைமைச் செய லகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செய லர் கு.ஞானதேசிகன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஆலோ சனை நடத்தினர். அதன்பின், சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.இதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில், அமைச் சர்கள்ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனி யப்பன் மற்றும் தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், நிதித்துறை செயலர் சண்முகம், பணியாளர் நலன் மற்றும் நிர் வாக சீர்திருத்தத்துறை செய லர் டேவிதார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன் றிய தலைவர் இரா.சண்முகராஜன்,தமிழ்நாடு அரசு அலுவலக உதவி யாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன், தலைமைச் செயலக சங்க தலைவர் கணேசன் உள்ளிட்ட 5 அமைப்புகளின் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்கள் கோரிக்கைகளை விளக்கினர்.

புறக்கணிப்பதாக அறிவிப்பு

பேச்சுவார்த்தை முடிவில், அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் இரா.சண்முகராஜன் கூறுகையில், ‘‘எங்கள் கோரிக்கைகளை நாங்கள் விளக்கி கூறினோம். கோரிக்கை களை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் அர சாணை வெளியிடுவதாக அமைச் சர்கள், அதிகாரிகள் உறுதியளித் தனர். பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. எனவே, நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்றார். மேலும் 3 சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி