எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2016

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:


எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒருசில மாவட்டங்களில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச் சிப் பெற தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டி யது ஒவ்வொரு பள்ளித் தலை மையாசிரியரின் கடமையாகும். பொதுத் தேர்வு நெருங்கும் நேரத் தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கும் தலை மையாசிரியர்கள் மீது கடுமை யான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட் டத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

8 comments:

  1. m matheshFebruaryFebruary 12, 2016 at 9:48 AM

    அரசு அப்பீல் வழக்கில் பதில் மனு தாக்கல் பன்னவேன்டும் என்று சொன்னது நீதி மன்றம் வின்சென்டு.ராதகிருஷ்ணன் and k.k .ராமகிருஸ்ணன் அவர்கள் சார்பாக சிவபாலமுருகன் வழக்கறிஞர் தாக்கல் பன்ன வேண்டும் அரசு அப்பீல் வழக்கிற்க்கு அரசே பதில் மனு எப்படி அளிக்க முடியும் வழக்கு பற்றி தெரிந்தால் விளக்கம் தர வேண்டும் இல்லை என்றால் தவறாக பதிவிட வேண்டாம்

    Reply



    m matheshFebruaryFebruary 12, 2016 at 9:51 AM

    ஏற்க்கன வே லாவன்யா வழக்கிற்க்கு அரசு அப்பீல் வருவதற்க்கு முன்பே பதில் மனு கொடுத்துவிட்டது



    மதிப்பிற்குரிய மாதேஷ் மேலே தங்களது விளக்கத்திற்கு நன்றி..,
    மேலும் இதற்கும் விளக்கம் அளிக்கவும்

    Subject Category
    LETTER PETITION & PIL MATTER - SLPs FILED AGAINST JUDGMENTS/ORDERS PASSED BY THE HIGH COURTS IN WRIT PETITIONS FILED AS PIL

    மேலே உள்ளதில் SLPs Filed against judgment என உள்ளது, அப்படி என்றால் என்ன அர்த்தம்

    அரசு தீர்ப்புக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்து உள்ளது என்று அர்த்தம் கொள்ளலாமா?

    இல்லை

    மதுரை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வின்சென்ட் அவர்களே பதில் மனு தாக்கல் செய்துள்ளாரா?
    அப்படி அவர்கள் பதில் மனு தாக்கல் செய்து இருந்தால்

    Vincent and ors vs state of tamil nadu ors என்று தானே வந்திருக்க வேண்டும்

    எப்படி இதனை அர்த்தம் கொள்ள வேண்டும் நீங்களே விளக்கமளிக்கவும்,


    உங்களது பதிவை ஏன் நான் காப்பி செய்தேன் என்றால் அதனை முதலில் உள்ள பதிவில் கேட்க தான் இதற்கு தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம்..,

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மதுரை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது...

      அதற்கு பதில் மனு திரு.வின்சென்ட் அவர்களிடம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது...

      தற்போது வின்சென்ட் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்து இருந்தால் அதன் மீது விவாதம் நடக்கும்...

      ஒரு வேலை வின்சென்ட் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனில் அரசு இந்த வழக்கை முடிக்க வேண்டும் என முறையிட்டு இருக்கலாம்...

      இந்த வழக்குடன் லாவண்யா அவர்களின் வழக்கும் இணைத்து தீர்ப்பு வழங்கலாம் என தெரிகிறது...

      இந்த வழக்கு தொடர்ந்து நடக்குமா? இல்லை முடிவு எதும் எட்டுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கணும்...

      அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் தீர்ப்பு வந்தால் நல்லது...

      அதேபோல் அரசும் ஆசிரியர் தகுதி தேர்வில் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் சாதகமான ஒரு முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்....

      Delete
    2. நன்றி சின்ன திருப்பதி அவர்களே..,

      Delete
  2. Helo van dam pa job, poi vara work iruntha parunga sir evanga yarum namaku nalatha seiya mattanga pa.

    ReplyDelete
  3. 4 ம் தேதி வழக்கு பதிவாளர் கோர்ட்டில்தான் வருகிறது விசாரணை ஏதும் நடக்காது

    ReplyDelete
    Replies
    1. Still 2014 Nov, Registration formalities not yet completed.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி