தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்: நஜீம் ஜைதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2016

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்: நஜீம் ஜைதி

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள்  சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி கூறியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய காலம் மே மாதம் 22 ஆம் தேதி முடிவடைகிறது.


இதேபோல புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு புதுச்சேரியில் நஜீம் ஜைதி ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: - வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சியினரின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் முறையாக தேர்தல் பறக்கும் படையினர் ஜி.பி.எஸ். வசதியுடன் ஒருங்ணைக்கப்பட உள்ளனர்.புதுவையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.

புதுச்சேரியில் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும்.சில இடங்களில் நடுநிலைமையை காக்கும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்படுவர். தேர்தல் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கை சரிபார்த்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

19 comments:

  1. தேர்தல் ஆணையம் தனது தேர்தல் தேதி அறிவிப்புகான ஆயத்த பணியை தொடங்கி விட்டது ஆனால் நமது கல்வித் துறையில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வருவதற்கான அறிகுறி தான் தெரியவில்லை..,

    ReplyDelete
    Replies
    1. Year entha velaya pathalum pakkalanalum comments podura unvelaya vida matra.... Ayyyyyyyooooo kadaule....

      Delete
    2. மதிப்பிற்குரிய சரவணன் என்னோட பதிவினால் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்கா?

      இல்லை தகுதித்தேர்வு எழுதியவர்கள் யாரும் எந்த தகவலுக்கும் எதிர்பார்ப்பது இல்லையா?

      Delete
    3. மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தை பதிவிட வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை சரவணன். அருள் முத்துசாமி என்ன தவறாக பதிவிட்டு விட்டார்? இதுவரை மிகவும் மரியாதையாக பொறுமையாக அருள் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

      Delete
    4. நீங்கள் எப்போதும் போல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அருள். தயக்கம் சிறிதும் வேண்டாம்.

      Delete
    5. மதிப்பிற்குரிய நண்பர்களே உங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி,

      Delete
    6. Arul sir u continue without any hesitation

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. சில கோமாளிகளின் கூற்றுக்கு எப்போதும் அஞ்ச வேண்டாம் அருள். கோமாளிகளை நாள் தோறும் உற்று நோக்கி வருகிறேன். பல அச்சுப் பிழைகள். பல பதிவுகளை உற்று நோக்கும் போது படு கேவலமாக தென்படுகிறது. சரியான தமிழ் வார்த்தைகள் இல்லை.கோர்வையான தமிழும் இல்லை. ஆங்கிலமும் இல்லை.

      Delete
    9. My vote is for Mr. Arul. Continue as ever young man, don't worry about chatter boxes.

      Delete
    10. My vote is for Mr. Arul. Continue as ever young man, don't worry about chatter boxes.

      Delete
  2. Innum intha oooru nambala nambhuthu

    ReplyDelete
  3. March 04 Tet. Case hearing. In supreme Court

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி