ஜாக்டோ செய்தி: 9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

ஜாக்டோ செய்தி: 9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஜாக்டோ செய்தி:

9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன.

1. இன்று மாலை 4 மணிக்கு நடத்தப்பட விருக்கும் பேச்சு வார்த்தையில் ஜாக்டோ சார்பாக 21 பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவேண்டும்.

(முன்னதாக  ஜாக்டோ 5 நபர்களுக்கு மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் , பின்னர் 10 பேர் வரலாம் எனவும் தகவல்  அரசு சார்பில் தரப்பட்டது)

காலை கூடிய ஜாக்டோ குழுவின் முடிவின்படி ஜாக்டோ சார்பாக
திரு.முத்துசாமி,
திரு.ரெங்கராஜன்,
திரு.தியேடர் ராபின்சன்,
திரு.முருகேசன்,
திரு.சாமி சத்தியமூர்த்தி,
திரு.இளங்கோவன் ஆகியோர் கொண்ட தூதுக்குழு தலைமைசெயலகம் சென்று  பேச்சுவார்த்தைக்குப்பின் 21 சங்க பிரதிநிதிகள் அனுமதிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

2. ஜாக்டோ தவிர பிற சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படக்கூடாது

( ஜாக்டா, ஜக்கோட்டா போன்றன)

அழைக்கப்பட்டாலுல் ஒன்றாக அமரவைத்து பேசக்கூடாது

3.ஜாக்டோ வின் 15 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட அரசினை நிர்பந்திப்பது.

இல்லையேல் ஜாக்டோ இன்று மாலையே கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பது ஆகிய 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி