என்.எஸ்.எஸ்., திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இன்றி முகாம்களை நடத்தமுடியாமல் பள்ளிகள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2016

என்.எஸ்.எஸ்., திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இன்றி முகாம்களை நடத்தமுடியாமல் பள்ளிகள் தவிப்பு

காரைக்குடி:நாட்டு நலப்பணி திட்டத்திற்கு (என்.எஸ்.எஸ்.,முகாம்) கடந்த 2 ஆண்டாக மத்திய அரசின் உதவி தொகை வழங்கப்படாததால், முகாம்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு நேரத்தின் ஒரு பகுதியை சேவைக்காக செலவிட வேண்டும். சமூக மற்றும் தொழிலாளர் சேவை, சமூக சேவையுடன் தொடர்புள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.


இதற்காக, காந்தியின் நூற்றாண்டையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரகம் 1969ல் என்.எஸ்.எஸ்., திட்டத்தை துவக்கியது. நாடு முழுவதும் உள்ள 3.75 கோடிபள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 35 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுகிறது. பள்ளிகள் அளவில் இளைஞர், அறிவியல் தினம், பொதுமக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடத்த ரூ.11 ஆயிரமும், ஆண்டுக்கு ஒரு முறை கிராமம், புறநகரில் துப்புரவு பணி முகாம் நடத்த ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதியை முகாம் நடக்கும்நாட்களில் மாணவர்கள் தங்குமிடம், உணவு, போக்குவரத்திற்காக செலவிடப்படும்.காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் இம்முகாம்கள் நடத்தப்படும்.நிதி ஒதுக்கீடு இல்லைமத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும், இத்திட்ட உதவி தொகையை 2014-15ம் ஆண்டில் இருந்து ஒதுக்கவில்லை. இதனால், இக்கல்வி ஆண்டுகளில் முகாம்கள் நடத்தவில்லை.சமீபத்தில் கல்வித்துறை சார்பில் என்.எஸ்.எஸ்., முகாமைஉடனடியாக நடத்துமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை.

இதனால், ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் முகாமை நடத்தவில்லை. நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கிய நோக்கம் சமூக சேவை மூலம் ஆளுமையைவளர்ப்பது. நிதி ஒதுக்கீடு இன்றி மாணவர்களின் ஆளுமை பண்பு குறைந்து வருகிறது. வரும் காலங்களிலாவது இத்திட்டத்திற்கான உதவிதொகையை விடுவிக்க வேண்டும் எனமாணவர், திட்ட அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி