அரசு ஐடிஐயில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

அரசு ஐடிஐயில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐயில் காலியாகவுள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை:சென்னை, கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர்தொடர் அறிவுரை மையம்  ஆகியவற்றில்  காலியாகவுள்ள  பணிமனை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன.


நான்கு பிரிவுகளின் கீழ் (COPA, FITTER, MRAC, CUTTING AND TAILORING) பணிமனை உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.டெய்லரிங் பிரிவுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அனைத்து பிரிவுகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழில்பழகுநர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2015 அன்று 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். (ஆதிதிராவிடர்35 வயது வரை). விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பெயர், கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வி, சாதி விவரம்,முன் அனுபவ விவரம், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் வரும் 10ம் தேதிக்குள், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி