நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு பெண் ஊழியர் மாரடைப்பால் மரணம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2016

நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு பெண் ஊழியர் மாரடைப்பால் மரணம்.

நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு பெண் ஊழியர் மாரடைப்பால் மரணம்.

அரசின் போக்கால் முதல் பலி!

நாகை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த தோழர் ஏ.அமுதா. . .

2003 போராட்டத்தின்போது பணிக்கு வந்த தற்காலிக இளநிலை உதவியாளர்.

CPS திட்டத்தில் உள்ள இவர் நேற்று துவங்கியுள்ள அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார்.

அரசின் போக்கால் ஏற்பட்ட மன அலுத்தத்தின் விளைவாக நெஞ்சுவலி வந்து தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

"2003 போராட்டம் போல் அரசு அடக்குமுறையை கையாலுமோ, ஓய்வூதியமே இல்லாமல் போய்விடுமோ" என
அங்கும் புலம்பியபடியே இருந்த இவர் இன்று (11.02.16) மதியம் மாரடைப்பால் அகால மரமடைந்தார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பலருக்கு வரும் மன அழுத்தம் இவருக்கும் வந்துள்ளது.

"இவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் செலத்திய தொகை, அரசு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட எதுவும் கிடைத்திட இன்றைய சூழலில் வாய்ப்பில்லை.
எனவே. . .
இவரின் மரணத்திற்கு காரணமான அரசு உடன் பத்து லட்ச ரூபாய் நிதியுதவியும், இவர் வாரிசுக்கு உடன் அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் பல அரசு ஊழியர் பழியாவதற்கு முன்னால் அரசு ஊழியரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்"

-மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
நாகப்பட்டினம்.

5 comments:

  1. உங்களது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்,



    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி