போராட்டம் சரியா? தேர்தல் நேர அரசு ஊழியர் போராட்டம் சரியா? தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2016

போராட்டம் சரியா? தேர்தல் நேர அரசு ஊழியர் போராட்டம் சரியா? தினமலர்


பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, 2011 தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க., அறிவித்தது. அக்கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் தீவிர போராட்டம் சரியா என, கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, இரு தரப்பு கருத்துக்கள் இதோ:


தேர்தல் நேரத்தில் தீவிர போராட்டம் நடத்தி, அரசை பணியவைத்து விடலாம் என்ற எண்ணத்தில், நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக, தொடர் போராட்டங்களை நடத்தியே வந்துள்ளோம். அதெல்லாம் அரசின் காதுகளை எட்டவில்லை. இப்போதைய போராட்டத்துக்கு எங்களை தள்ளியது அரசு தான். நான்கு ஆண்டுகளாக போராட்டத்தை தீவிரப்படுத்தாமல் இருந்ததற்கு, 2011 தேர்தலின் போது, அ.தி.மு.க., அளித்தவாக்குறுதியை நிறைவேற்றி விடும் என நம்பினோம். ஆனால்,அரசு எங்களை ஏமாற்றி விட்டது.எதிர்கால உத்தரவாதம் இல்லாத பணியை, அரசுத் துறைகளில் புகுத்தி, கீழ் மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை, ஊழலைஊக்குவிக்கும் வகையில், அரசே துணை நிற்கிறது. நிர்வாகச் சீர்கேடுகள் அதிகரிக்க, அரசின் கொள்கையும், அணுகுமுறையுமே காரணம்.

அரசின் அனைத்து திட்டங்களையும் செம்மையாக செயல்படுத்தி, அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர, அரசு பணியாளர்கள் தேவை. ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற, அரசு தயாராக இல்லை. தேர்தல் பணியை முடக்குவது எங்கள் நோக்கமல்ல; எங்கள் நியாயத்தை பெறுவதே இலக்கு. கு.பாலசுப்ரமணியம்பொது செயலர், அரசு பணியாளர் சங்கம்தேர்தல் காலத்தில், அரசு ஊழியர்களை ஏவி விட்டு, மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என, எதிர்க்கட்சிகள் செய்யும் செயல் தான், இந்தப் போராட்டம். அரசு ஊழியர் போராட்டத்தை துாண்டுவதற்கு காசும், காலமும் செலவிடுபவர்கள், அதனால் எந்தப் பயனையும் பெறப்போவதில்லை. கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், பல லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர் உட்பட, தமிழகத்தின் அனைத்து இளைஞர் களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதித்தில் அரசு செயல்பட்டு உள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு அமல்படுத்தவில்லை. முந்தைய அரசு தான் செயல்படுத்தியது.அதை சரி செய்யத்தான், 2011தேர்தல்அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என, அறிவித்தோம்.

அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை யில், இந்நடவடிக்கையை, உடனடியாக எடுக்க முடியவில்லை. அடுத்த, ஐந்து ஆண்டு களில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றினால் போச்சு. நாஞ்சில் சம்பத்பேச்சாளர், அ.தி.மு.க.,

11 comments:

  1. நல்லது நடக்கட்டும் என நம்பிக்கையில் தான் போராட்டம் நடத்தப்படுகிறது, கடைசியில் முடிவு அரசின் கையில் அல்லவா உள்ளது..,

    ReplyDelete
  2. தேர்தலை மனதில் வைத்தாவது கோரிக்கைகளை நிறைவேற்றமாட்டார்களா? என்ற நோக்கத்தில்தான் போராட்ட்ம் நடத்தப்படுகிறது...

    ReplyDelete
  3. Please 10th tatkal application 2016 date

    ReplyDelete
    Replies
    1. மணிகண்டன் அவர்களே தக்கல் விண்ணப்பம் பற்றி தெரியவில்லை, உங்களுக்காக வலைதளத்தில் தேடி பார்த்து தகவல் இருந்தால் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்

      Delete
    2. மணிகண்டன் அவர்களே 10 தனித்தேர்வர்கள் தக்கல் விண்ணப்பம் பற்றிய தகவல் தெரியவில்லை..,

      Delete
  4. சொன்ன வாக்கை காப்பாற்ற தெரியலை.அடுத்து ஓட்டு, வாங்குவதற்கு ஐந்தாண்டு பொறுக்க சொல்கிறதா அரசாங்கம்

    ReplyDelete
  5. இதஐ பற்றி பேச சம்பத் அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை
    அப்படி ஏதும் கருத்து கூற வேண்டுமானால் ஆளும் கட்சி என்ற நிலையிலிருந்து விலகி அதன் பின்பே கருத்து கூறமுடியும்

    அதுவறையில் சம்பத்துக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை

    ReplyDelete
  6. இதஐ பற்றி பேச சம்பத் அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை
    அப்படி ஏதும் கருத்து கூற வேண்டுமானால் ஆளும் கட்சி என்ற நிலையிலிருந்து விலகி அதன் பின்பே கருத்து கூறமுடியும்

    அதுவறையில் சம்பத்துக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை

    ReplyDelete
  7. Govintha...govintha...no trb..money...time...everything has gone waste believing this govt....lot of confusion...Now I eagarly started to expect election instead of trb notification...it is my kindly advice not to join in anna university and EB with the help of money..if do so surely loose in case govt change...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி