எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக தாய் மொழியில் எழுதலாம் அரசு தேர்வுத்துறை முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக தாய் மொழியில் எழுதலாம் அரசு தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக சிறுபான்மையின மாணவர்கள் அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுத அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.


கடந்த 2006-ம் ஆண்டு முதல் சிறுபான்மையின மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மாணவர்களும் தமிழ் பாடத்தை முதல் மொழிப்பாடமாக எடுத்து படிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி 2006-ம் ஆண்டு 1-வது படித்தவர்கள் இந்த ஆண்டு 10-வது வகுப்பு படிக்கவேண்டும். எனவே அந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படிக்கவேண்டும் என்றும், அப்படித்தான் தேர்வு எழுதவேண்டும் என்றும் அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுஇந்த நிலையில், சிறுபான்மையின மாணவர்கள் தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதை எதிர்த்து, சிறுபான்மை மொழி பள்ளிகளைச் சேர்ந்த சில மாணவர்களும், பள்ளிக்கூட நிர்வாகிகளும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்தமிழில் தேர்வு எழுதாமல் தெலுங்கு உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளில் அந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டனர்.இதற்கிடையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெருங்குவதால், அரசு தேர்வுத்துறை அதிகாரி ஒருவரிடம்இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:-சிறுபான்மையின மொழியில் தேர்வு எழுதலாம்தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15-ந் தேதி தொடங்குகிறது. தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படிக்காத சிறுபான்மையின மாணவர்கள் அவர்கள் படித்த சிறுபான்மை இன மொழியிலேயே (தாய் மொழி) இந்த ஆண்டு தேர்வு எழுதலாம்.இவ்வாறு அந்தஅதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி